இந்திய பாரத்தில் மத்திய அரசில் கட்டுப்பாட்டிலே மாநில அரசுகள் இயங்கி வருகின்றது...
இந்திய அரசியலமைப்பு சட்டம் முப்பத்து ஆறாம் திருத்தம் 1975ன் படி மத்திய அரசின் ஆட்சி அதிகாரமும் அதன் ஆட்சி நிலவரையும் பற்றி தெரிந்து கொள்வோம்..
இந்தியா என்ற பாரதம் பல மாநிலங்களை கொண்டதோர் ஒன்றியம் ஆக இருக்கும், இதை வைத்தே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகின்றார், ஆனால் மத்திய அரசை ஒன்றிய அரசு என விமர்சித்தாலும் மத்திய அரசுக்குகேன்று பெரும் அதிகாரம் உள்ளது..
மத்திய அரசின் அதிகாரம்:
நாடாளுமன்றம் தனக்கென கருதுகின்ற வரையுரைகள் மற்றும் வரைக்கட்டுகளுக்கு இணங்க, சட்டத்தினால்,
1.மத்திய அரசால் ஒரு தனி மாநிலத்தை உருவாக்கலாம்/நிறுவலாம் அல்லது இன்னொரு மாநிலத்துடனும் இணைக்கலாம்...
2.எந்த ஒரு ஆட்சிநிலவரையை பிரித்தோ அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களை அல்லது மாநிலங்களின் பகுதியை ஒன்றிணைத்தோ மாநிலம் ஒன்றன் பகுதியுடன் ஆட்சிநிலவரையை எதனையும் ஒன்றிணைத்தோ புதிய மாநிலத்தை உருவாக்கலாம்....
3.எந்த ஒரு மாநிலத்தின் பரப்பிடத்தையும் விரிவாக்கலாம்..
4.எந்த ஒரு மாநிலத்தின் பரப்பிடத்தையும் குறைக்கலாம்..
5.எந்தவொரு மாநிலத்தின் எல்லைகளையும் மாற்றலாம்...
6.எந்தவொரு மாநிலத்தின் பெயரையும் மாற்றலாம்..
இந்த சட்டத்திற்கு உட்பட்டு மத்திய அரசு குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் மேற்கூறியுள்ளனவையை நிறைவேற்றலாம்..
சில நாட்களாக தமிழகத்தில் கொங்கு நாடு தனி யூனியன் பிரதேசமாகிறது என்ற செய்தி பரவி கொண்டுள்ளது...
கோவை மண்டலத்தில் தனக்கென ஒரு ஓட்டு வங்கியை வைத்துள்ளது பாஜக, கொங்கு மண்டலம் தனி யூனியன் ஆனால் பாஜக ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது, மத்திய அரசு கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக்கும் வேலை தொடங்கி உள்ளதாகவும் தகவல் வெளிவந்துகொண்டுள்ளது...
Link : கொங்கு நாடு
தமிழக பாஜக புதிதாக பொறுப்பேற்றுள்ள முன்னால் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள் கூறியதாவது தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் 150 பாஜக MLA சட்டமன்றத்திற்குள் இருப்பார்கள் என்றார் அவர்...இது சாத்தியமா என தெரியவில்லை என்றாலும் தமிழகத்தில் பிஜேபி வளரத்தொடங்கியது எனவே மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறி வருகின்றனர்...
மத்திய அரசும் மாநில அரசும் ஒர் சுமூக உறவில் இருந்தால் தான் நாடு முன்னேற்றத்திற்தை நோக்கி செல்லும்.. சில அரசியல் தலைவர்கள் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி செய்து வருகின்றனர்...இதை மத்தியில் ஆளும் மோடி அரசு ஒரு நாளும் அனுமதிக்காது என அமித்ஷா அவர்கள் எச்சரித்துள்ளார் எனபது குறிப்பிடத்தகுந்தது..
தொகுப்பு : செந்தமிழ் நியூஸ் குழு
Post a Comment