Responsive Advertisement

      அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் தமிழக அரசுக்கு திரு. SSR சிவராஜ் அவர்களின் கேள்விகள்....

அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டல் படியே நடக்கிறது. ஏற்கனவே இருந்த ஒருவரை நீக்கி அவ்விடத்தில் யாரையும் பணியமர்த்தவில்லை. காலிப் பணியிடங்களில்  புதியவர்களை நியமனம் செய்கிறோம்.

60 வயதில் ஓய்வு பெறவேண்டும் என்பது நியதி.69 வயதிலும் பணியில் இருப்பவர்களையே மாற்றுகிறோம்.
        -அறநிலையத்துறை அமைச்சர் விளக்கம்.


வீட்டுக்கு அனுப்பப்பட்ட அர்ச்சகர்கள் 58 வயதை தாண்டியவர்கள் அப்படியென்றால் ?


அர்ச்சகர்களுக்கு சட்டப்படி ஓய்வு வயதை கருத்தில் கொண்டே அனுப்பப்பட்டார்கள் அப்படித்தானே ?


சரி இருக்கட்டும்.  அப்படி என்றால் அவர்களுக்கு லேபர் சட்டப்படி குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்பட்டதா? 


ஞாயிற்றுக்கிழமையன்று வேலை பார்த்துள்ளார்கள்.  அதற்கு OT வழங்கப்பட்டதா? 


குறைந்த பட்சம் 21 நாட்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தால் ஒப்பந்த தொழிலாளர்களாக இருந்தாலும் PF ESI பிடித்தம் செய்திருக்கவேண்டும். 


அப்படி செய்யப்பட்டதா?  அரசாங்கத்தை பொறுத்தவரை கோவில் ஒரு நிறுவனம். 

சொத்துகள், வரிகள், மின் கட்டணம், சம்பளம் எல்லாம் பிடிக்கப்படுகின்றன. 

மின்சாரம் கூட கமர்ஷியல் கட்டணமே வசூலிக்கப்படுகிறது.


அதனால் இது நிறுவனமே.நிறுவனத்துக்கு உள்ள சட்ட விதிகளின்படி அவர்களுக்கு மேற்ச்சொன்ன விஷயங்கள் செய்யப்பட்டனவா?

கோவில் அரசுக்கு சொந்தம் என்று சொல்கிறார்கள்.


அப்படியென்றால் அரசாங்க ஊழியரான அர்ச்சகருக்கு பென்சன் வழங்கப்படுமா?  வழங்கப்படுகிறதா? 


கோவில் அரசுக்கு சொந்தமென்றால் வேலை செய்து கொண்டிருக்கும்போது அர்ச்சகர் இறந்துவிட்டால் அவரது மகனுக்கோ, மகளுக்கோ அரசாங்க வேலை தரப்பட்டிருக்க வேண்டும்.


குறைந்தது அதே கோவிலில் பணி புரியவாவது வாய்ப்பு தந்திருக்கவேண்டும்.


அது நடந்ததா?  ஆதாரங்கள் எங்கே?


பணியில் இருக்கும் ஒரு அர்ச்சகர் இறந்தால் அவரது மனைவிக்கு பென்சன் தரப்படுகிறதா? 


இது எல்லாவற்றையும் உடனடியாக அவர்களுக்கு 12% வட்டி போட்டு தந்துவிட்டு பின்னர் இந்த இந்து விரோத அரசாங்கம் இந்த கம்பி கட்டுற கதை எல்லாம் செல்லலாம் 🙏


மேல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் கூறுமா ??....

Twitter Link


தொகுப்பு : SSR சிவராஜ் Threads


வெளியீடு : செந்தமிழ் நியூஸ்

Post a Comment