திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்ததிலிருந்து மத்தியில் ஆளும் மோடி அரசை ஒன்றிய அரசு என்றே அழைத்து வருகின்றது..
இதனை தொடர்ந்து திமுகவை சார்ந்த ஊடகங்களும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே செய்தியை வெளியிட்டு வருகின்றது..
திமுக தலைவர் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகின்றார். இந்நிலையில் தற்போது கொங்கு நாட்டை தனி யூனியன் பிரதேசமாக மாற்றும் வேலையில் இறங்கியது மத்திய அரசு....
மத்திய அரசுக்கும் தமிழக ஆட்சி பொறுப்பில் இருக்கும் திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து கொண்டுள்ளது..
தற்போது கோவை பகுதியை சுற்றியும் உள்ள திருப்பூர், நாமக்கல், நீலகிரி, கரூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களை கொங்கு நாடு என்று பாண்டிச்சேரியை போல தனி யூனியன் பிரதேசமாக மாற்றவதற்கான வேலையில் இறங்கி உள்ளது மத்தியில் ஆளும் பிஜேபி அரசு..
10 லோக்சபா தொகுதியும் 61 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியது இந்த கோவை கொங்கு மண்டலம், இந்த கொங்கு மண்டலத்தில் பாஜக தனி வாக்கு வங்கியை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது..
இதனை தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் தங்களை அவரவர்களின் மண்டலங்களின் பெயர்களை வெளியிட்டு மகிழ்கின்றனர்..
திமுக செய்யும் பிரிவினை வாத செயலில் பரிசு கொங்கு மண்டலம் என தனி யூனியன் பிரதேசம் ஆகப்போவதே என்று பாஜக-வினரால் கிண்டல் செய்யப்பட்டு வருகின்றது...
தொகுப்பு : செந்தமிழ் நியூஸ் குழு
Post a Comment