தல அஜித்குமார் நடிக்கும் டைரக்டர் H.வினோத் அவர்களால் இயக்கப்படும் போனி கபூர் அவர்களால் தயாரிக்கப்படும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டது...
இன்று அஜித் நடிப்பில் வெளிவந்து திரையுலகில் வெளிவந்து காதல் கோட்டை திரைப்படம் வெளியான நாள், காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது...
வலிமை படத்தின் முதல் தோற்ற விடியோவை யூடியூப்பில் வெளியிட்டார் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இதை அடுத்த அஜித் ரசிகர்கள் ட்வீட்டரில் #ValimaiMotionPoster என்ற டேக் மூலம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
முதல் தோற்ற விடியோவில் Power is State Valimai என குறிப்பிடப்பட்டுள்ளது, படத்தில் அஜித்குமார் 2000ம் ஆண்டு இருந்தது போல் முதல் தோற்றம் உள்ளது..
படத்தின் முதல் தோற்ற விடியோவை பார்க்கும் போது படத்தின் பெரும்பாலான காட்சிகள் மற்றும் கதை Bike Race-ஐ வைத்த இருக்கும் என தெரிகிறது..
படம் 2021 தியேட்டரில் ரீலீஸ் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த ஆண்டே வெளிவந்து திரையுலகில் சாதனை படைக்கும் என நம்பப்படுகிறது.
நேற்றைய தினம் வெளியான கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் முதல் தோற்றம் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது, ஆனால் எதிர் விக்ரம் படத்தின் முதல் தோற்றத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் படக்குழு பெரும் அதிர்ப்தியில் உள்ளனராம்...
தொகுப்பு : செந்தமிழ் நியூஸ் குழு
Post a Comment