Responsive Advertisement

     சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த கபாலி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 5 வருடங்கள் நிறைவடைந்தது....

    நடிகர் ரஜினிகாந்த் அவர்களை இயக்க முன்னணி இயக்குனர்கள் காத்துகிடந்தனர் ஆனால் திரு‌‌.ரஜினி அவர்களின் பார்வை சில படங்களையே இயக்கிய பா.ரஞ்சித் அவர்களின் மேல் வீழ்ந்தது...

   ஏற்கனவே பா.ரஞ்சித் அவர்கள் இயக்கிய அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தந்தது..தலித் அரசியல் சார்ந்த படங்களையே இயக்கிய வந்த பா.ரஞ்சித் அவர்கள் ரஜினியை வைத்து அதே தலீத் அரசியலை பேசுவார் என்றே கபாலி படத்திற்கு அதிக எதிர்ப்பு வரக்காரணமாயிருந்தது...

    ரஜினியின் வயதான தோற்றத்தில் மாஸ் லூக்-குடன் வெளிவந்த கபாலி திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளிவந்து Jio வசதி இல்லாத அந்த கால கட்டத்திலையே இணையத்தில் அதிக பார்வையாளர்கள் பார்த்த முதல் தோற்ற வீடியோ என்ற படைத்தது, அன்று முதல் அதன் பின் வந்த பிரபல நடிகர்களின் சாதனையே கபாலி படத்தை ஒப்பிட்டே‌ விமர்சனம் வரத்தொடங்கியது..

    முதல் தோற்ற வீடியோவின் சந்தோஷ் நாராயணனின் இசை படத்தின்‌ மீதான ஈர்ப்பு இன்னும் ஒட்டிக்கொண்டது...

    V Creation தயாரித்த அதாவது கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்த கபாலி படத்தின் புரமோஷன் விண்ணை தொட்டது..விமானத்தில் ரஜினியின் முகத்துடன் கூடிய படத்துடன் போஸ்டர் இடம் பெற்று ஒட்டு மொத்த இந்திய திரைத்துறையையும் திரும்பி பார்க்க வைத்தது கபாலி...

   சிறைச்சாலையில் ரஜினியின் இண்ட்ரோ காட்சி, மகிழ்ச்சி என்ற தொடங்கிய ரஜினியின் வசனம் திரையரங்கமே கொண்டாடியதை இன்னும் திரையரங்கு உரிமையாளர்கள் நினைவு கூறுகிறார்கள்...

   தன் மனைவியை இழந்த ஒரு மனிதனாக வலம் வரும் கதாநாயகன், ரஜினியை தாதாவாக படத்தை நகர்த்திய இயக்குனர் நடுவில் மாஸ் வசனங்கள், நெருப்புடா பாட்டுடன் படத்தின் மாஸ் குறையாமல் படம் நகர தொடங்கியது..

   தன் மகள் மற்றும் மனைவி உயிருடன் இருப்பதை அறிந்த ரஜினியின் ஆவல் கலந்த தேடல், தீராத காதல் வெளிப்படுத்திய ரஜினி என்ற மகா நடிகனுக்கு தீனி போட்டது கபாலி கதாபாத்திரம்...

  மகளுடன் மனைவியை தேடுவதுமாய் நகரும் படம் குமுத வள்ளியை கபாலி பார்க்கும் வரை ரசிகர்களை உணர்வை துண்டும் விதமாக படம் அமைந்திருக்கும், படத்தின் 25 வருடம் பார்க்காமல் இருந்த காதல் மனைவியை பார்த்தும் வெளிப்படும் ஆனந்த கண்ணீர் பார்வையாளர்களின் கண்களையும் பதம் பார்த்து...

   தீராத காதலுடன் மாஸ் கிளைமேக்ஸ் என படம் முடிவு பெற்றது, 

     முதல் நாள் பல எதிர் விமர்சனம் வந்த நிலையில் நான்கு ஐந்து நாட்களில் பட வசூல் விண்ணை தொட்டது, காதல் ஜோடிகளின் வருகை படத்தின் வசூல் உச்சத்தை அடைய காரணமானது...

கபாலி காதல் 💪...

தொகுப்பு : செந்தமிழ் நியூஸ் குழு

Post a Comment