நீட் தேர்வு (NEET - National Eligibility cum Entrance Test) மத்திய அரசால் 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது, பின் நீட் தேர்வானது 13 மொழிகளில் National Testing Agency என்ற தேர்வு ஆணையத்தால் 2019ம் ஆண்டு முதல் 13 மொழிகளில் நடத்தப்பட்டு வருகின்றது..
இந்தியாவின் அனைத்து மாநில அரசின் ஒத்துழைப்போடு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது, நீட் தேர்வு தொடங்கிய நாட்களில் இருந்து நீட் தேர்வை பற்றி பல குற்றச்சாட்டுகளை முன் வைத்த எதிர்கட்சிகள் மத்திய அரசையும் மாநில அரசையும் விமர்சித்து வந்தது...
தற்போது ஆளும் திமுக அரசானது எதிர்கட்சியாக இருந்த போது திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் முன் முன்வைக்க தொடங்கினர்...
அனிதா என்ற மாணவி 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் தேர்ச்சி அடையாமல் போனதற்காக தற்கொலை செய்து கொண்டதை பல கட்சிகள் அரசியலாக்க தொடங்கினர்...
அவ்வாறு தொடந்து அன்றைய திமுக அரசும், சில நடிகர்களும் நீட் தேர்வை எதிர்த்த காரணம் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பெரும் சுமையாக உள்ளது என்பதே ஆகும்...
நீட் தேர்வு 2021 பற்றிய அறிவிப்பு வந்துள்ள நிலையில் திமுகவின் நீட் தேர்வு ரத்து கேள்விக்குறி ஆனது..
ஆனால் தற்போது ஆட்சி அமைத்துள்ள திமுக-வானது சொன்ன வாக்குறுதை நிறைவேற்றவில்லை, நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என்று சொல்லிய திரு. மா.சுப்பிரமணியனின் அறிக்கையை கண்டு பல மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்..
திமுக மற்றும் சில நடிகர்கள் சொல்வது போல் நீட் தேர்வு கடுமையானது இல்லை, அதனை எதிர்கொள்ள ஏழை/ அரசு பற்றி மாணவர்களுக்கு சரியான திறமை இல்லை என்பதாகும், இதற்கு காரணம் பெரும்பாலும் அரசு பள்ளிகளில் நடைபெறும் சரியான கல்விமுறையும் இல்லை மற்றும் ஆசியர்களை கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுவது இல்லை...
நீட் தேர்வை தனியார் பள்ளி மாணவர்கள் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெரும் போது அரசு பள்ளி மாணவர்களால் மட்டும் வெற்றி பெற முடியவில்லை என்றால் காரணம் சரியான கல்வியும் பயிற்சியும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைப்பதில்லை....
வீணாக நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யாமல் அரசு பள்ளியில் தகுதியான ஆசிரியர்களை வைத்து தகுந்த முறையில் பயிற்சி அளித்தால் கண்டிப்பாக அரசு பள்ளி மாணவர்களும் வெற்றி பெறுவார்கள்...
ஏழை மாணவர்கள் படிப்பில் அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் உள்ள வரை ஏழை மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியே...?..
உங்களின் பார்வையில் நீட் தேர்வு பற்றி கமெண்ட் செய்யவும்..
தயாரிப்பு : செந்தமிழ் நியூஸ் குழு
Post a Comment