உலக நாயகன் கமலஹாசன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும், கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்தின் முதல் தோற்றமானது இணையத்தில் படக்குழுவினரால் இன்று மாலை வெளியிடப்பட்டது..
படத்தின் மிரட்டல் தோற்றத்துடன் கமல்ஹாசனும் விஜய் சேதுபதியும் இருப்பது போல் முதல் தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது..
ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் விக்ரம் திரைப்படம், ஏற்கனவே பல கமல்ஹாசன் திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டு படம் டிராப் ஆனது போல் இந்த விக்ரம் திரைப்படமும் ஆகிவிடுமோ என்றே அவரின் ரசிகர்கள் சிறு கவலையாக இருப்பது தெளிவாக தெரிகிறது..
இன்று முதல் தோற்றம் வெளியிட்டது போல் மருதநாயகம், சபாஷ் நாயுடு, இந்தியன் 2 போன்ற படத்தின் முதல் தோற்றமும் வெளிவந்து பின் படம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..
கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த கைதிக்கு பிறகு தன் வெற்றியை பதிவு செய்வாரா என்று திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஏற்கனவே கமல் நடித்து வெளிவந்த மோகன்லால் நடித்த ரீமேக் பாபநாசம் திரைப்படம் வெற்றி அடைந்தது, அடுத்து அதன் இரண்டாம் பாகம் மோகன்லால் நடித்து வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் மீண்டும் கமலை வைத்து ரீமேக் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது, பாபநாசம் திரைப்படத்தில் நடித்த கௌதமிக்கும் கமலுக்கு சிறு பிரச்சினை ஏற்பட்டதால் பாபநாசம் அடுத்த பாகம் நடிக்க மறுத்ததை தொடர்ந்து நதியாவிடன் வாய்ப்பு சென்றது, பின் நதியா சில காரணங்களால் கமலுடன் நடிக்க மறுக்க பின் அந்த வாய்ப்பு பூஜாவின் சென்றதாகவும் சொல்லப்படுகிறது...
விக்ரம் திரைப்படம் முதல் தோற்றத்துடன் நின்று விடாமல் படம் முழுமையாக எடுக்கப்பட்டு வெளிவரவேண்டும் என்றே கமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பு...
தொகுப்பு : செந்தமிழ் நியூஸ் குழு
Post a Comment