தமிழக மாநில பிஜேபி தலைவராக இருந்த எல்.முருகன் அவர்களை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்த போது மத்திய இணை அமைச்சராக பதவி வழங்கியது மோடி அரசு..இந்நிலையில் தமிழக பாஜக புதிய தலைவர் நியமிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது..
தமிழக மாநில பிஜேபி புதிய தலைவரை செய்ய பிஜேபி தலைமை ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது..
ஏற்கனவே தமிழக பாஜக துணை தலைவராக இருந்த திரு அண்ணாமலை அவர்களை புதிய தமிழக பாஜக தலைவராக நியமித்தது...
பாஜக கட்சியில் நேரத்திற்கு தகுந்த பதவியை வழங்குவதால் மற்ற கட்சி நிர்வாகிகளால் ஈர்க்கப்பட்டு வருகிறது..
ஏற்கனவே பொன்ராதாகிருஷ்னன் அவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பும், முன்னால் பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு தெலுங்கானா ஆளுனராகவும் பொறுப்பு வழங்கியது மத்தியில் ஆளும் பாஜக அரசு...
இருபது வருடத்திற்கு பிறகு 4 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் அமர்த்தப்பட்டதில் பாஜகவின் தேர்தல் வியூகம் பெரும் பங்கு வகிக்கிறது.
மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் 2026ம் ஆண்டு தேர்தலில் ஆட்சி அமைக்க சில வியூகங்களை பாஜக வகுக்கும் என்று நம்பப்படுகிறது..
பாஜக வகுக்கும் தேர்தல் வியூகம் வெற்றி அடைந்து வந்தாலும் வரும் காலங்களில் அரசியலில் வியூகம் எடுபடுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்
தொகுப்பு : செந்தமிழ் நியூஸ் குழு
Post a Comment