Responsive Advertisement

புதிய ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா 2021-ஐ அறிமுகப்படித்தியுள்ளது இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சரகம்...


     புதிய திரைப்பட கொள்கையை சில நாட்களாக தமிழ்நாட்டில் சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்களால் எதிர்க்கவும், சில இயக்குனர்கள் வரவேற்பளித்தும் அறிக்கைகள் வெளிவந்து கொண்டுள்ளது.

புதிய ஒளிப்பதிவு  மசோதா கருத்துரிமையின் குரல்வளையை நெரிக்கும் என்று நடிகர் சூர்யா ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது...

     ஏற்கனவே நடைமுறையில் திரைப்பட கொள்கை 1952ன் படி திரைப்படம் ஒன்று தகுந்த தணிக்கைக்கு பிறகு அந்த திரைப்படத்திற்கு CBFC ( Central Board of Flim Certification) மூலம் U (unrestricted public exhibition) , U/A (parental guidance required for  Childrens under 12)  மற்றும் A (adult)  போன்ற சான்றிதழ் வழங்கப்பட்டு திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது...

தற்போது புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள திரைப்பட கொள்கையின் 2021 படி படத்தின் காட்சிகளை வைத்து தணிக்கை செய்து வயது வாரியாக சான்றிதழ் வழங்கப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, U/A 7+U/A 13+ , U/A 16+ மற்றும் A (adult content).

      இந்த புதிய சட்ட திருத்த மசோதா திரையரங்கம் மற்றும் OTT தளத்தின் வெளிவரும் அனைத்து படத்திற்கும் பொருந்தும் என்று தகவல் தொழில்நுட்ப துறை தெரிவித்துள்ளது..
  
    இந்த  புதிய சட்ட திருத்த மசோதா அமலுக்கு வந்து திரைப்படம் வெளியிட தொடங்கினால் தான் புதிய கொள்கையின் தாக்கம் குறித்து தெரியவரும், பெரும்பாலும் பெற்றோர்கள் இந்த வயது வாரியான  தணிக்கை செய்யப்பட்டு திரைப்படம் வெளிவருவதை வரவேற்பதாக தெரிவித்திருக்கிறார்களாம்..

தொகுப்பு : செந்தமிழ் நியூஸ் குழு

Post a Comment