கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில் மக்கள் தனது அன்றாட பணிகளை தொடங்க ஆரம்பித்து விட்டனர், கொரோனா வலியிலிருந்து மீண்ட மக்களை மேலும் விலைவாசி உயர்வால் துயரம் அடைந்து வருகின்றனர்..
ஏற்கனவே கட்டுமானப் பொருட்களின் விலைகளை தமிழக அரசு உயர்த்தியது, இதனை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர தொடங்கியது காரணம் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டுள்ளது..
தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் கடந்த வாரம் பெட்ரோல் நூறு ரூபாயை தாண்டியது, சென்னையிலும் பெட்ரோல் விலை நூறு ரூபாயை தொட்ட நிலையில் தற்போது பாண்டிச்சேரியிலிலும் பெட்ரோல் நூறு ரூபாயை நெருங்கிக் கொண்டு உள்ளது...
ஏற்கனவே 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்த போது மாதத்திற்கு 60 காசு முதல் ஒரு ரூபாய் வரை ஏறிக்கொண்டிருந்தது..
பின் அதனை தினசரி பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்து, இதன் படி தினமும் 15 காசுகள் முதல் 50 காசு வரை தினசரி விலை உயர்த்தப்பட்டு வருகிறது..
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் தனியார் பஸ் கட்டணங்கள் உயரும் அபாயம் எழுந்துள்ளது..
இந்த விலை ஏற்றத்தால் நடுத்தர மக்கள் பெருதும் பாதிக்கப்பட்டுள்ளனர்..
மத்திய மற்றும் மாநில அரசுகளில் வரிச்சுமையே விலை ஏற்றத்திற்கு பெரும் காரணமாக உள்ளது, மாநில அரசும் மத்திய அரசை குறை சொல்வதும், மத்திய அரசு மாநில அரசை குறை சொல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்..
இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது மக்கள் மட்டுமே..
ஆகையால் பெரும்பாலும் மக்கள் சைக்கிளையும் , எலக்ட்ரிக் பைக்கை நோக்கி படை எடுக்க ஆரம்பித்து விட்டனர்....
தயாரிப்பு : செந்தமிழ் நியூஸ் குழு
Post a Comment