தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கை சில தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
தளர்வுகள் பற்றி பார்ப்போம் :
1. கொரோனா தொற்று குறைந்துள்ள சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் துணி கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2.தொற்று குறைந்து வரும் 11 மாவட்டங்களுக்கு உள்ளே நகர பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
3.ஏற்கனவே பல தளர்வுகள் அளிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது தமிழ் நாடு அரசு
அந்த மாவட்டங்கள் : அரியலூர், கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, மதுரை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், தூத்துக்குடி, வேலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்குள் மற்றும் இடையே பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது...
அதாவது நாளை முதல்( 28.06.2021 ) இந்த மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து இயங்கும்.
4.அனைத்து கடற்கரைகளிலும் நடை பயிற்சி செய்ய காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை அனுமதி அளித்துள்ளது.
5.கோவில், மசூதி போன்ற அனைத்து வழிபாட்டு தலங்கங்கள் திறக்க அனுமதி
6.நூறு சதவீத பணியாளர்களுடன் தீப்பெட்டி தொழிற்சாலை இயங்க அனுமதி
தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாகவும் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்..
தயாரிப்பு : செந்தமிழ் News
Post a Comment