1992 ஆம் ஆண்டு சுரேஷ்கிருஷ்னாவால் இயக்கப்பட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பு, மனோராமா, சரத்பாபு ஆகியவர்கள் இணைந்து நடித்த அண்ணாமலை திரைப்படம் கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது...
தேவா பின்னனி இசையில் உருவான இந்த title card இன்றும் கொண்டாப்படுகிறது...
அண்ணாமலை திரைப்படத்தில் சாதாரண பால்காரராக வலம் வரும் ரஜினிகாந்த் தன் நண்பன் சரந்பாபுவை தொழில் ரீதியாகவும் மன ரீதியாகவும் வெற்றி பெறவதற்காக போராட்டமா அமைந்திருக்கும்...பாசத்திற்கும் , பாடலுக்கும் குறையில்லாமல் படத்தை நகர்த்தி இருப்பார் இயக்குனர் அவர்கள்...
தன் நண்பன் தன்னோடு வீட்டை இடித்தற்கு நண்பனிடும் விடும் சவால் வசனம் ரசிக்கும் படி இருக்கும்
மலடா அண்ணாமலை என்ற ரஜினியின் வசனத்துடன் தேவா பின்னணி இசையில் வரும் காட்சி பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தும் வகையிலும் அமைத்துள்ளது.
இயக்குனரும் ரஜினியின் குருவுமான கே.பாலச்சந்தர் பெரும் கடன் சுமையில் தவித்த போது ரஜினி பணமில்லாமல் நடித்து கொடுத்த திரைப்படம் அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது...
படம் ரீலிஸ் காலத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் படத்தின் போஸ்டர் மற்றும் கட்அவுட்களுக்கு அனுமதி அளிக்காத நிலையிலும் படத்தில் வெற்றி பட்டி தொட்டி எங்கும் கலக்கியது..
ரஜினி ஸ்டைல் நடிப்பு படத்தை உச்சத்திற்கே கொண்டு சேர்த்த அண்ணாமலை மிகப்பெரிய Industry hit..
இந்த 29 வருட நிறைவை கொண்டாடும் வகையால் அவரது ரசிகர்களால் ட்வீட்டரில் #29YearsOfAnnamalai என்ற ஹேஷ்டேக் மூலமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்...
தொகுப்பு : செந்தமிழ் News
Post a Comment