Responsive Advertisement

     தல அஜித்குமார் நடிக்கும் டைரக்டர் H.வினோத் அவர்களால் இயக்கப்படும் போனி கபூர் அவர்களால் தயாரிக்கப்படும் வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

   தொடர்ந்து படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடாமல் மௌனம் காக்கும் படக்குழுவால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். சன் பிக்சர் தயாரிக்கும் விஜய் நடிக்கும் Beast திரைப்படம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தை பற்றி அறிவிப்பும் வரத்தொடங்கியது..

    ஏற்கனவே தல அஜித்தின் பிறந்தநாள் அன்று வலிமை படத்தின் முதல் தோற்றம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் அதை வெளியிடாமல் படக்குழு ரசிகர்ளை‌ ஏமாற்றியது....

   இதனை தொடர்ந்து வலிமை முதல் தோற்றம் இன்று மாலை வெளியிடப்பட உள்ளதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தயாரிப்பாளர் போனி கபூரை புகழ்ந்தும் சில சிரிப்பூட்டும் மீம்ஸ்களை போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்..

    இந்தப் நாள் வலிமை நாள், அஜித் ரசிகர்களுக்கான நாள், ஏற்கனவே ட்ரெண்டிங் என்றால் முதலிடத்தில் உள்ள அஜித் ரசிகர்களை இன்றும் சமூக வலைதளத்தை தெறிக்கவிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

தயாரிப்பு : செந்தமிழ் நியூஸ்


Post a Comment